இந்தியா பிரதான செய்திகள்

காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக 6 பேர் உயிரிழப்பு:-

காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டம் தாத்ரி நகரில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் கனமழை பெய்தமையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்காரணமாக பல வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *