இலங்கை பிரதான செய்திகள்

பாராளுமன்றின் உதாசீன போக்கே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் காரணம் – மஹிந்த தேசப்பிரிய


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்றின் உதாசினமான போக்கே, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் காரணம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த  தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது காலம் தாழ்த்தப்படுவதற்கான பிரதான ஏதுவாக பாராளுமன்றின் உதாசீனப் போக்கை சுட்டிக்காட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என பலர் தம்மிடம் கேட்பதாகவும் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவது தொடர்பில் தேர்தல்  ஆணைக்குழுவும் வருத்தமடைகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஆணைக்கு அரசாங்கம் கட்டுப்பட்டால் விரைவில் தேர்தலை நடத்தலாம்  என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *