இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் அழுத்தம் கொடுக்கப்படும் – Paul Scully


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் அழுத்தம் கொடுக்கப்படும் என பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்து பாராளுமன்ற குழுவின் தலைவர் போல் ஸ்கேலி   (Paul Scully )  தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர்  இலங்கை வாழ் தமிழ் சமூகத்திற்கு ஆதரவளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முனைப்புக்கள் மந்த கதியில் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வுகளில் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts