இலங்கை பிரதான செய்திகள்

மாயமான கிளிநொச்சி வர்த்தகர் திடீரென பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தார் – ரிலாக்ஸ்சுக்காக காணாமல் போயிருந்தாராம் :

hm3
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

கடந்த வாரம் கிளிநொச்சியில் காணாமல் போனதாக கூறப்பட்ட இளம் வா்த்தகா் நேற்று திங்கள் கிழமை கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளாா். இதன்போது தான் மன அமைதிக்காக காணாமல் போயிருந்ததாக குறித்த வா்த்தகா் வாக்கு மூலம் அளித்துள்ளாா்

இது தொடா்பில் மேலும் தெரிய வருவதாவது

கொம்மந்தரை வல்வெட்டித்துறைச் சேர்ந்த கிளிநொச்சியில் வா்த்தக நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த கிருஸ்ணசாமி ரதீசன் (வயது36) என்பவரை 12.10.2016 ஆந் திகதி மதியம் 12.00 மணியிலிருந்து  காணவில்லை என்று உறவினர்களால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டமைக்கு அமைவாக கிளிநொச்சிப் பொலிசார்  விசாரணைகளை மேற்கொண்டு இருந்த நிலையில் இவர் கடத்தப்பட்டிருப்பார் என ஒருசிலரும்  கடன்தொல்லையினால் தலைமறைவாகி இருப்பார் என ஒரு சிலரும் பொலிசாருக்கு வழங்கிய தகவல்களுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது
hm4
இந்நிலையில் நேற்று திங்கள் கிழமைமுற்பகல்  குறித்த வர்த்தகர் தானாகவே  கிளிநொச்சிப் பொலிஸ்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளாா்

பின்பு குறித்த வர்த்தகரை கிளிநொச்சிப் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பதில்பொறுப்பதிகாரி அனந்த சுமணசிறி விசாரணைக்கு உட்ப்படுத்தியத்தில் தான் தனது வேலைப்பளு காரணமாக சரியாக நித்திரைகளின்றி மன உளைச்சல்  காரணமாக   செய்வதறியாது  பேரூந்தில் ஏறி வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இடங்களிற்கு பேருந்திலையே பயணம் செய்ததாகவும் தனது மனநிலை சரியானதும் தான் இன்று கிளிநொச்சிக்கு திரும்பி உள்ளதாகவும் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும்  கடன் காரணமாக தலைமறைவாகவில்லை எனவும் தனது வாக்குமூலத்தில் பதிவிட்டுள்ளதாக பொலீஸாா் குறிப்பிட்டுள்ளனா்.
hm5
அத்துடன் இவர்  கடன்காரனமாக தலைமறைவாகி இருந்திருப்பாரா  கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் வினவிய போது  அவர் தங்களுக்கு பணம் தர  வேண்டும் என இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் வரவில்லை  எனவும் பொலீஸாா் தெரிவித்துள்ளனர்.

hm6

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *