உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப்பின் அலுவலகம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

drumb
அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஹில்ஸ்பேர்க் என்ற நகரத்தில் அமைந்துள்ள டொனால்டு டிரம்ப்பின் குடியரசு கட்சியின் அலுவலகத்தின்  ஜன்னல் வழியாக நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டை வீசியதன் காரணமாக  அலுவலகத்தின் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்துள்ளதுடன்   சில பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அலுவலக சுவரில் நாஜி குடியரசு கட்சியினர் ஹில்ஸ் பேர்க் நகரை விட்டு வெளியேற வேண்டும்  என் எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இச்சம்பவத்துக்கு ஹிலாரி கிளிண்டனின் ஜனநாயக கட்சியினரே காரணம் என டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  எனினும் தாக்குதலுக்கு ஹிலாரி கிளிண்டன் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *