இலங்கை

பாராளுமன்றில் ஒழுக்கக் கேடாக நடந்து கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட வேண்டும் – ராஜித சேனாரட்ன


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்றில் ஒழுக்கக் கேடாக நடந்து கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து, அமர்வுகளுக்காக மணி ஒலி எழுப்பியவர்கள் பாராளுமன்றிலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்த விவகாரத்தில் தாம் தோல்வியடைந்துவிட்டோம் என புரிந்து கொண்டு இவ்வாறு அவர்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் அநீதியான தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து விதமான சட்டங்களும் அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் அரசாங்கப் பிரதானிகள் பண்டாரநாயக்ககக்களைப் போன்று செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

  • பாராளுமன்றில் ஒழுக்கக் கேடாக நடந்து கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அமைச்சர் ராஜித சேனாரட்ன, நாட்டின் அனைத்து விதமான சட்டங்களும் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

    எல்லாமே நல்லவைதான்! ஆனால் சாத்தியப்பாடு? மழைக்கு கூடப் பள்ளியில் ஒதுங்காதவர்களைத் தேர்தல் கட்சிகள் தமது மக்கள் பிரதிநிதிகளாகப் போட்டிக்களத்தில் நிறுத்தினால், மக்கள் என்ன செய்வார்கள்? குத்துமதிப்பாக எவரோ ஒருவருக்கு வாக்களிக்கத்தான் செய்வார்கள்! அப்படித் தெரிவானவர்களிடம் நல்லொழுக்கத்தை எங்கிருந்து எதிர்பார்க்க முடியும்?

    மேலும், நாட்டில் இருக்கும் நல்ல சட்டங்களை(இந்நாட்களில் இயற்றப்பட்டவையை அல்ல!) முறையாக அமுல்படுத்தினாலே பாதிப் பிரச்சனைகளும், குற்றங்களும் குறையுமே? இயற்றிய சட்டங்களை முறையாக அமுல்படுத்தினால் ஆட்சியை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில், எதையுமே கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள், காலத்துக்கு காலம் வேதம் ஒதுவதில் மட்டும் குறைச்சல் காட்டுவதே இல்லை! அந்த விடயத்தில், ஜனாதிபதி கூட விதிவிலக்கல்ல! இன்று சொல்வதை நாளை மறப்பதில் மட்டும் இவர்கள் வல்லவர்கள், என்பதை மறுக்க முடியாது!

    பாகிஸ்தானில் நீதித் துறைக்கு இருக்கும் சுதந்திரம் கூட இலங்கையில் அத் துறைக்கு இல்லையே? வழக்குகள்/ விசாரணைகள், என்னவோ நடக்கின்றனதான்! ஆனால், சாமானியர்களுக்கு கிடைக்கும் தீர்ப்புக்களும், தண்டனைகளும், அரசியல்வாதிகளுக்கு மட்டும் என்றைக்குமில்லை? அதன் பெயர்தான், ‘ஜனநாயகமோ’?