இந்தியா பிரதான செய்திகள்

எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய முழு ஆயுத பலத்துடன் இந்திய ராணுவம் உள்ளது அருண் ஜேட்லி:-

எந்த சூழ்நிலையையும் சமாளிக்க இந்திய ராணுவம் முழு ஆயுத பலத்துடன் தயாராக இருப்பதாக நாடாளுமன்றத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை நிலவுவதாகவும், போர் வந்தால் 10 நாட்களுக்குதான் ஆயுதங்கள் போதுமானதாக இருக்கும் எனவும் மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கை கடந்த வாரம் தெரிவித்திருந்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அருண் ஜேட்லி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தமது ராணுவம் முழு ஆயுத பலத்துடன் உள்ளது எனவும் ஏதாவது ஆயுதங்களில் பற்றாக்குறை இருந்தால் அது விரைவாக சரி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *