இந்தியா பிரதான செய்திகள்

காஷ்மீரை மீட்டெடுக்க பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – மெகபூபா முப்தி:-

காஷ்மீரை மீட்டெடுக்க பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என, அம்மாநில முதலமைச்சர் மெகபூபா முப்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் 18-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்டறிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளர்h.

காஷ்மீரில் போலீஸோ, அப்பாவி பொதுமக்களோ யார் கொல்லப்பட்டாலும் அவர் காஷ்மீரிதான். நாம் அனைவரும் ஒன்றே. காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் இதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையற்ற தன்மையில் இருந்து காஷ்மீரை மீட்டெடுக்க பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் ஆதரவளிக்க வேண்டும்.வாகா எல்லை வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் காஷ்மீருக்குள் கடத்தப்படுகின்றன. ஆனால் இதுபற்றி யாரும் கவலைப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *