இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி கல்வி வலயத்தில் 47 பாடசாலைகளில் குடி நீர் நெருக்கடி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

கிளிநொச்சி கல்வி வலயத்தில் 47 பாடசாலைகள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.ஜோன் குயின்டஸ் தெரிவித்துள்ளார்.

பூநகரி, கண்டாவளைக் கோட்டங்களிலே கூடுதலான பாடசாலைகள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன. குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள பாடசாலைகளுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக குடிநீர் வழங்கல் இடம்பெற்று வருகின்றது.   எனவும் தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளா்
விடுமுறை நாட்கள் நெருங்கியுள்ளதன் காரணமாக மாணவர்கள் ஆசிரியர்கள் குடிநீர் நெருக்கடியினை சமாளிக்கக் கூடிய நிலைமை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இரணைமடுக் குளம் வற்றியதன் காரணமாக கிளிநொச்சி நகரில் உள்ள பாடசாலைகள், திணைக்களங்கள் உட்பட குடிமனைகள் அனைத்திலும் கிணறுகளின் நீர் மட்டம் குறைவடைந்து குடிநீர் நெருக்கடியும் உருவாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் எப்போதும் இல்லாத நெருக்கடியினை வறட்சியினால் எதிர்கொண்டுள்ளதாக மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *