இலங்கை பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண சபை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெற்கு மக்களுக்கு நாளை நிவாரணம் வழங்கவுள்ளது


நாளைய தினம் கிழக்கு மாகாண சபையினால் தெனியாய பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மற்றும் சேதமடைந்த வீடுகளை உடையவர்களுக்கான கட்டடப் பொருட்கள் கையளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சேகரிக்கப்பட்ட 9 மில்லியன் ரூபா செலவில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

நாளைய தினம் காலை 10 மணியளவில் தெனியாய பிட்டபெத்தர பிரதேச செயலகம் மற்றும் தெனியாய கொட்டபொல பிரதேச செயலகம் ஆகியவற்றில் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண உயர் மட்ட அரச அதிகாரிகளும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *