இலங்கை பிரதான செய்திகள்

அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து ஜனாதிபதி அமைச்சரவையில் கலந்துரையாடியுள்ளார் :

maithri3
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

அண்மையில் படைவீரர் நிகழ்வு ஒன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவையில் கலந்துரையாடியுள்ளார். நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற போது விசாரணைகள் நடத்தப்படக்கூடாது என தாம் எப்போதும் கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ உத்தியோகத்தர்கள் படையினர் கைது செய்யப்பட முன்னதாக தமக்கு அறிவிக்கப்பட வேண்டுமென தாம் கோரியதாகத் தெரிவித்துள்ள அவர் நாட்டின் படைச் சேனாதிபதி என்ற ரீதியில் படையதிகாரிகள் இராணுவத்தினர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக தமக்கு அறிவிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply