உலகம்

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி


தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா (Jacob Zuma)  மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியை சந்தித்துள்ளது.

வாக்கெடுப்பில் ஜனாதிபதி  ஜேக்கப் ஜுமாக்கு ஆதரவாக 198 வாக்குகளும் , எதிராக 177 வாக்குகளும் கிடைத்துள்ளமையால்  நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.

தென்னாப்பிரிக்க ஜனாதிபதியாக  கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஜேக்கப் பதவி வகித்து வருகின்ற நிலையில் அவர் மீது பல்வேறு   ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அவரை பதவி நீக்கம் செய்யும் வகையில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர் மீது ஏற்கனவே 8 தடவை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு  தோல்வியடைந்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply