இலங்கை பிரதான செய்திகள்

பிலியந்தல துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ஜனாதிபதியினால் நிதி :

போதைப்பொருள் சுற்றி வளைப்புக்கு சென்ற பொலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அலுவலர்கள் மீது பிலியந்தலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.

கடந்த மே 09 ஆம் திகதி பிலியந்தல, மொரட்டுவ வீதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது தனது தந்தையாரின் கடைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த 11 வயதுடைய சமாதி ரன்சிகா எனும் சிறுமி உயிரிழந்ததுடன், அவரது முத்த சகோதரரான 17 வயதுடைய சதீப ருக்ஷான் மற்றும் தங்கையான 08 வயதுடைய செனூரி பத்திரன ஆகியோர் காயமடைந்திருந்தனர்.

உயிரிழந்த சிறுமியின் பெற்றோர், சகோதரர்களை இன்று சந்தித்த ஜனாதிபதி   அவர்களது சுகநலன்களை விசாரித்ததுடன், அந்த சம்பவம் தொடர்பில் தனது கவலையையும் தெரிவித்தார்.

சிறுமியின் குடும்பத்துக்கு ஜனாதிபதியினால் நிதிஉதவியும் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *