இந்தியா பிரதான செய்திகள்

வருமானவரி மோசடி செய்பவர்களைக் கண்டுபிடிக்க சமூக வலை தளங்கள் பயன்படுத்தப்படவுள்ளன:-


வருமானவரி மோசடி செய்பவர்களைக் கண்டுபிடிக்க சமூக வலை தளங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்களின் புகைப்படங்களை சேகரித்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக வருமானவரி புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 2016-17-ம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் வரி மோசடி செய்தவர்களிடம் இருந்து 3,210 கோடி ரூபாய் மீட்கப்பட்டதாகவும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் கணக்கில் காட்டப்படாத .1,429 கோடி ரூபா கண்டுபிடித்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தகவல் தொடர்பு சாதனங்கள் மேம்பட்டு உள்ளனதனால் நல்ல தகவல்கள் கிடைக்கின்றன எனவும் இதைப் பயன் படுத்தி கறுப்பு பணத்தை வெற்றிகரமாக மீட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வருமாகவரி மோசடியை தடுப்பதற்கு புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி வெளிநாடு சென்றவர்கள் சமூதவலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இதனால் வெளிநாடு சென்றவர்களின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்களின் செல்போன்களில் உள்ள புகைப் படங்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களையும் தனிக்குழுவினர் கண்டுபிடிப்பார்கள் எனவும் இதில் வரி மோசடி செய்திருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *