இலங்கை பிரதான செய்திகள்

ரவியின் அதிகாரிகளுடன் வெளிவிவகார அமைச்சை ஏற்றுக்கொள்வதில் திலக் மாரப்பன தயக்கம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ரவி கருணாநாயக்கவின் அதிகாரிகளுடன் வெளிவிவகார அமைச்சினை ஏற்றுக்கொள்வதில் திலக் மாரப்பன தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் இன்னமும் அமைச்சில் பதவி வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற  நிலையில் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு திலக் மாரப்பன விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ரவி கருணாநாயக்க பதவி விலகும்  போது தமது தனிப்பட்ட உத்தியோகத்தர்களை பணியிலிருந்து நீக்க வேண்டாம் என ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்காலிக அடிப்படையிலேயே ரவி கருணாநாயக்க பதவி விலகினார் என தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *