உலகம் பிரதான செய்திகள்

சுயநினைவற்றிருந்த பெண்ணை வல்லுறவுக்குட்படுத்திய 3 பிரித்தானியருக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனையும் பிரம்படியும்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மதுபோதையில் சுயநினைவற்றிருந்த பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பிரித்தானியாவைச் சேர்ந்த மூவருக்கு சிறைத்தண்டனையை வழங்கியுள்ள சிங்கப்பூர்நீதிமன்றம்  அவர்களிற்கு பிரம்படியை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் இடம்பெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. 20 முதல் 25 வயதிற்குட்பட்ட மூவரிற்கே இந்த தண்டனையை சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மூவருக்கும் ஆறரை வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளதுடன் ஆறு பிரம்படியும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது

பிரித்தானியாவில் இருந்து இசைநிகழ்வு ஒன்றிற்காக சிங்கப்பூர் சென்றவர்களே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இரவுவிடுதியொன்றில் தன்னை சந்தித்த இவர்கள் பின்னர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மலேசிய பெண்மணியொருவர் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *