உலகம்

தாய்லாந்தில் மன்னரை விமர்சித்த மாணவர் அமைப்பை சேர்ந்தவருக்கு சிறைதண்டனை

தாய்லாந்தில் மன்னரை விமர்சித்த    மாணவர் அமைப்பை சேர்ந்த   ஒருவருக்கு  2½ வருடங்கள்       விதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் புதிய மன்னராக 64 வயதான வளிரலாங்கார்ன்   கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம்  பதவி ஏற்றிருந்தார்.  அவரை விமர்சித்து  முகப்புத்தகத்தில் அவரது புகைப்படங்களும்    வெளியிடப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

இது தொடர்பில்  மாணவர் அமைப்பை சேர்ந்த  அதுபட்பூன் பட்டாரக்சா என்பவர் கடமந்த டிசம்பர் மாதம் பாங்கொக்கில் கைது செய்யப்பட்ட நிலையில்  அவர் மீது நீதிமன்றில்  வழக்கு தொடரப்பட்டது.

வுழக்கினை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2½ வருடங்கள்  சிறைதண்டனை    விதித்துள்ளது.
இந்தத் தண்டனைக்கு ஐநா மனித உரிமை அமைப்பு  எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் மன்னர் பற்றியோ, அவரது குடும்பத்தினர் பற்றியோ விமர்சிப்பது அவமரியாதையாக கருதப்படுவதுடன்  அவ்வாறு செய்வோர் மீது அவமதிப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *