விளையாட்டு

பாகிஸ்தானில் இளம் கிரிக்கெட் வீரர் தலையில் பந்து தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானில் இளம் கிரிக்கெட் வீரரான சுபைர் அகமட்(Zubair Ahmed )   பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். பாகிஸ்தானின் கழக அணியில் விளையாடி வந்த    ஜுபைர் அகமது,  கடந்த    14  இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியின் போதே இவர் உயிரிழந்துள்ளார்.

துடுப்பாட்டத்தின் போது தலைக்கவசம் அணியாததால்  பந்து தாக்கியதில்   தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்  அவர் உயிரிழந்துள்ளார்.

சில காலங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய ஆரம்ப ஆட்டக்காரரான பிலிப் ஹூக்ஸ்   பந்து பின்கழுத்து பகுதியில் தாக்கியதில் மைதானத்திலேயே நினைவு இழந்து   விழுந்து இறந்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *