இலங்கை

ஜனாதிபதிக்கும் ஐ.தே.மு விற்கும் இடையிலான சந்திப்பு ஒத்தி வைப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையில் நடத்தப்படவிருந்த சந்திப்பு அடுத்த வாரம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமான விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அண்மைய நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய தேசிய முன்னணி அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாட்டின் நிலைமைகள் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *