இலங்கை பிரதான செய்திகள்

ராஜபக்ஸக்களுக்கு எதிராக வழக்கு விசாரணை செய்ய தனியான நீதிமன்றம் அமைக்கப்பட முடியாது :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸக்களுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த தனியான நீதிமன்றம் அமைக்கப்பட முடியாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக வழக்கு விசாரணை செய்ய தனியான நீதிமன்றம் அமைக்கப்படும் என கூறுவோருக்கு அரசியல் அமைப்பின் அ,ஆ கூட தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக ராஜபக்ச குடும்பம் பழிவாங்கப்படுகின்றது எனத் தெரிவித்த  ஜீ.எல்.பீரிஸ் அரசாங்கத்தின் பிரதான நோக்கம் ராஜபக்சக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மட்டுமேயாகும் எனவும்   தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *