இந்தியா பிரதான செய்திகள்

சென்னை கிருஷ்ணகிரி உட்பட 5 கரையோர மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை:-

சென்னை கிருஷ்ணகிரி உட்பட 5 கரையோர மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழகத்தில் பொதுவாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதேபோல் கர்நாடகாவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் ஆற்றை கடக்க முயற்சிக்கக் கூடாது எனவும் பொதுப்பணி துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *