உலகம் பிரதான செய்திகள்

கொங்கோ மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கொங்கோ மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது. கொங்கோ குடியரசின் அல்பர்ட் குளத்திற்கு அருகாமையில் வாழ்ந்து வரும் மீன்பிடிச் சமூகமே இந்த மண்சரிவு காரணமாக அதிளவில் உயிரிழந்துள்ளனர்.

குளத்தை அண்டிய மலைப் பகுதி சரிவுக்கு உட்பட்டதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்துள்ளனர். உயிர் இழப்பு விபரங்கள் முழு அளவில் இன்னமும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் சிரமங்கள் நிலவி வருவதாகவும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *