உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்க வெர்ஜினியா மாகாண இனவெறி மோதல்களுக்கு எதிர்ப்பு- பொஸ்டனில் பல்லாயிரக் கணக்கானோர் பேரணி:-

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் ஏற்பட்ட இனவெறி மோதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொஸ்டன் நகரில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் 1861-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது வெர்ஜினியா மாநிலத்தில் அடிமைகள் சார்புப் படையை நடத்திச் சென்ற ரொபர்ட் இ லீ என்பவரது சிலை அகற்றப்படுவதனைக் கண்டித்து வலதுசாரி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் பேரணி நடத்தினர். இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இனவெறிக்கு எதிரான குழுவினர் எதிர்ப்பு பேரணி நடத்தியதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டிருந்தது.

வன்முறை சம்பவத்திற்கு இரு தரப்பினருமே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் கடுமையாக கண்டித்திருந்த நிலையில் இந்த இனமோதலை ஜனாதிபதி டிரம்ப் சரியான விதத்தில் கையாளவில்ல என வமர்சனங்கள் எழுந்திருந்த.

இந்தநிலையிலேயே இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொஸ்டன் நகரில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

சார்லொட்டஸ்வில்லி நகரில் ஊர்வலத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்தும், இனவெறி எதிர்ப்பாளர்களின் குரல் அடக்கப்படுவதை கண்டித்தும் பேரணியில் பங்கேற்றவர்கள் குரல் எழுப்பினர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *