இலங்கை பிரதான செய்திகள்

உள்ளுராட்சி அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்துதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

20161020_095718
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் ‘உள்ளுராட்சி அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்துதல்’ எனும் கருத்தரங்கு இன்று 20.10.2016  கிளிநொச்சி செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஸ்ட  ஆய்வாளர் சிஹாஜினி விஜயசுந்தர தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பெண்களின் அரசியல் பிரவேசம் குறைவதற்கான காரணங்கள், அரசியல் பிரவேசத்தை அதிகரிப்பதற்கு முன்னெடுக்க கூடிய செயற்திட்டங்கள் போன்றன கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க மேலதிக அரசாங்க அதிபர் சத்திசீலன், மாவட்ட உதவி செயலாளர் பிருந்தாகரண்  சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற மேல்மாகான உள்ளுராட்சி திணைக்கள உதவி ஆணையாளர்  தர்மசிறி நாணயக்கார, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாதர்சங்க  உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
20161020_102156

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *