இலங்கை பிரதான செய்திகள்

கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு நினைவுத்தூபி திறக்கப்பட்டது:-

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு சந்தியில் உள்ள நினைவுத்தூபி புனரமைக்கப்பட்டு நேற்று   மாலை திறந்துவைக்கப்பட்டது.

1987 ஆம் மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரின் படை நடவடிக்கையின் போது படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் நினைவாக இந்த நினைவுத்தூபி 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்மாணிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு படுவான்கரை நோக்கிய படை நடவடிக்கையின் போது படையினரால் குறித்த நினைவுத் தூபி சேதமாக்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை காலம் குறித்த நினைவுத்தூபி புனரமைக்கப்படாத நிலையிலேயே இருந்து வந்தது.

இந்த நிலையில் குறித்த பிரதேச மக்கள் குறித்த நினைவுத்தூபி புனரமைக்கப்படாமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் இதனை புனரமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *