இலங்கை பிரதான செய்திகள்

இரணைதீவு மக்களின் நில மீட்பு போராட்டம் 115 வது நாளாக தொடர்கிறது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பூநகரி பிரதேச இரணைத்தீவு மக்களின் சொந்த நிலத்திற்குச் செல்வதற்கான போராட்டம் இன்று புதன் கிழமை 115 வது நாளை எட்டியுள்ளது.

அமைச்சர்கள், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா், அதிகாரிகள் என அனைவரினதும் வாக்குறுதிகள், காலக்கெடுக்கள் கடற்காற்றோடு பறந்துவிட இரணைத்தீவு மக்களின் போராட்டம் 115 நாளை எட்டியுள்ளது.

தங்களது பூர்வீக  இடத்தில் மீள குடியேற வேண்டும் என வலியுறுத்தி தொடர்  கவனயீர்ப்பு போராட்டத்தை  ஆரம்பித்து இன்று 115 நாளாகும். நூறாவது நாள் வரைக்கும் இரணைமாதாநகா் கடற்கரையில்  இடம்பெற்ற வந்த கவனயீர்ப்பு போராட்டம்  அதன் பின்னா் இரணைமாதாநகா் தேவாலயத்தில் இடம்பெற்று வருகிறது.

எமது பிரதேசத்தைச் சேர்ந்த   பெண் அமைச்சர்  வந்தார். இன்னும்  இரண்டு வாரங்களில் சொந்த நிலத்திற்குச் செல்லலாம்  நல்லாட்சி அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கும்  என்பதோடு கடந்த அரசை குற்றம் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஓருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாக இருக்கின்றவரும் வந்தார். கடந்த ஆட்சியையும், அதனோடு சேர்ந்தியங்கியவா்களையும்  குற்றம் சுமத்தினார். தான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை அழைத்து வந்து தீர்வு தருவதாக  உறுதிமொழி அளித்தார், காலக்கெடுவும் வழங்கினாh் எதுவும் நடைபெறவில்லை.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வந்தாh்  அவரோடு எற்கனவே வந்த எல்லா அரசியல் பிரமுகர்களும் வந்தனா்  அவா்களும் காலக்கெடு வழங்கினாh் உறுதிமொழி அளித்தாh்கள்  ஆனால் அவா்களின்  உறுதிமொழிகளும் காலக்கெடுக்களும் இந்த கடற்கரை காற்றோடு சென்றுவிட்டது. எனக் கவலை தெரிவித்த  மக்கள்

நூறாவது நாள் இன்று கொழும்புக்குச் சென்று போராட்டத்தை நடத்தினோம்  இதன் போது ஜனாதிபதிக்கு எங்களின்  சொந்த நிலத்திற்குச் செல்வதற்கான கோரிக்கை அடங்கிய மகஜரையும்  அனுப்பி வைத்தோம்.  அதற்கான பதிலாக  எங்களின் பிரச்சினை தொடர்பில் உரிய அதிகாரிகளின்  கவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக கடிதம் மூலம்  பதில் கிடைக்கப்பெற்றுள்ளது.  ஆனால் இன்றுவரை எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை எனவே நாங்கள் எங்களின் சொந்த நிலத்திற்குச் செல்லும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *