இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – வடமாகாண சபையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண நிதி திட்டமிடல்,சட்டம் ஒழுங்கு,காணி விவகாரம், வீடமைப்பு, போக்குவரத்து, மின்சாரம், சுற்றுலாத்துறை, உள்ளூராட்சி , மாகாண நிர்வாகம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண ஆளுனர் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

அதேவேளை  வடமாகாண விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை,மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக புளொட் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் சத்தியப்பிரமாணம்  செய்து கடமைகளை பொறுப்பேற்றார்

அத்துடன்  சுகாதாரம், சுதேச மருத்துவம், சிறுவர் விவகார அமைச்சராக ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்ட மாகாணசபை உறுப்பினர் வைத்தியக்கலாநிதி ஞானசீலன் குணசீலனும் ,  வடமாகாண பெண்கள் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவை, கூட்டுறவு, வர்த்தக வாணிபம், உணவு வழங்கல் மற்றும் விநியோகம் ,  சிறுதொழில் முயற்றி ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சராக அனந்தி சசிதரனும் இன்றையதினம் வடமாகாண ஆளுனர் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம்  பதவி விலகியுள்ள நிலையில் ரெலோ இயக்கமானது  மீன் பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரனை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியதனையடுத்து அவரை முதலமைச்சர் அமைச்சுப் பதிவியிலிருந்து விலக்கியதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *