இந்தியா பிரதான செய்திகள்

மதுரையின் காளவாசல் பள்ளிவாசல் ஒன்றில் வெடிபொருள் நிரப்பப்பட்ட பந்துகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன:-

மதுரையின் காளவாசல் அருகில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெடிபொருள் நிரப்பப்பட்ட பந்துகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பள்ளிவாசலில் அதிகளவான முஸ்லிம் மக்கள் தொழுகைக்கு செல்வது வழக்கம்.

இந்தநிலையில் இன்று காலையில் சிறப்பு தொழுகைக்கு மக்கள் சென்ற போது பள்ளிவாசல் வளாகத்தில் 2 பிளாஸ்டிக் பந்துகள் இருப்பதைத் அவதானித்த தொழுகைக்கு சென்ற மக்கள் அவை வெடிபொருள் நிரப்பப்பட்டுள்ளது போன்று இருந்ததால் சந்தேகம் கொண்டு ஒரு பநதுக்கு தீiவைத்து பார்டத்தனர்.

அப்போது அந்தப் பந்து தீப்பற்றி எரிந்துள்ளதனையடுத்து காவல்நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் பள்ளி வாசல் முழுவதுமாக சோதனையில் ஈடுபட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *