இலங்கை பிரதான செய்திகள்

கிளி அரசாங்க அதிபரினால் பிரதேச செயலகங்களுக்கு நீர்த்தாங்கிகள் கையளிப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் தற்போது நிலவிவரும் வரட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் முகமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் உழவு இயந்திரங்களுடனானநீர்த்தாங்கிகள் மாவட்டச் செயலகங்களுக்க  வழங்கப்பட்டு, மாவட்டச் செயலகம்  அதனை பிரதேச செயலகங்களுக்கு வழங்கியுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர்  சுந்தரம் அருமைநாயகம் அவர்களினால் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்களிடம் .இன்றைய தினம் (24) நீர்தாங்கிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

கரைச்சி பிரதேச செயலாளா்  கோ.நாகேஸ்வரன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்
ஜெயராணி ஆகியோரிடமும்  நீர்த்தாங்கிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே அனர்த்தமுகாமைத்துவ அமைச்சினால் கரைச்சி பிரதேச செயலகபிரிவிற்கு 4 நீர்த்தாங்கிகளும், கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேசங்களுக்கு தலா 3 நீர்த்தாங்கிகளும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *