இலங்கை பிரதான செய்திகள்

நான்தான் அமைச்சர் நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என முதல்வருக்கு டெனீஸ்வரன் கடிதம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நான்தான் தற்போதும் போக்குவரத்து அமைச்சராக உள்ளேன் எனவும், என்னை அமைச்சுப் பதவியிலிருந்து எவரும் நீக்கமுடியாது என டெனீஸ்வரன்  வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில் தன்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவிக்க உங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லையெனக் குறிப்பிட்ட டெனீஸ்வரன் தான்தான் இப்போதும் அமைச்சுப் பதவியில் தொடர்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20ஆம் நாள் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக டெனீஸ்வரனுக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில்,  போக்குவரத்துத் துறைக்கான அமைச்சுப் பதவி வடமாகாண முதலமைச்சரால் அனந்தி சசிதரனுக்கும் மீன்பிடி அமைச்சை சிவனேசனுக்கும் முதலமைச்சரால் வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே முதலமைச்சருக்கு டெனீஸ்வரன்  மேற்படி கடிதத்தினை  அனுப்பி வைத்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *