இந்தியா

பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட குர்மித் ராம் சாமியாரின் ஆச்சிரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்


பலாத்கார வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹிம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதனையடுத்து ஹரியானாவில் கலவரம் வெடித்துள்ளது.

இந்தநிலையில்  சிர்சா மாவட்டத்தில் உள்ள  ராம் ரஹிமின் தலைமை ஆசிரமத்தில் பெண்கள் குழந்தைகள்  லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர் எனவும்    அவர்களை வெளியேற்றுவதற்காக ராணுவ வீரர்கள் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ராணுவத்தினருடன் காவல்துறையினரும் இணைந்து ஆசிரமத்தை படிப்படியாக ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தம் 1000 ஏக்கர் பரப்புடன், உள்ளேயே  பாடசாலை விளையாட்டு கிராமம், திரையரங்கு, மருத்துவமனை போன்றவை கொண்டது   இந்த ஆசிரமம் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *