இலங்கை பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சியின் மூன்று அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள UNP: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று அமைச்சர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த அமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து அண்மையில் ஜனாதிபதியிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ராஜாங்க அமைச்சர்களான லக்ஸ்மன் யாபா அபேவர்தன, டிலான் பெரேரா ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டே அரசாங்கத்தின் அமைச்சர்களை விமர்சனம் செய்து, ஆளும் கட்சியை நாளுக்கு நாள் இவர்கள் நெருக்கடிக்குள் ஆழ்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *