உலகம் பிரதான செய்திகள்

ஈராக்கில் இரண்டு புதைகுழிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட தலை துண்டிக்கப்பட்ட உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன:-


ஈராக்கில் காணப்பட்ட இரண்டு புதைகுழிகளில் ஐறூறுக்கும் மேற்பட்ட உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொசூல் அருகே படவுஸ் என்ற நகரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இரண்டு மிகப் பெரிய புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  குறித்த இரண்டு புதை குழிகளிலும் ஐநூறுக்கும் மேற்பட்டோரின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் அவை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை ஐ.எஸ். பயங்கரரவாதிகளால் கைது செய்யப்பட்டு தண்டனை நிறை வேற்றப்பட்டவர்களாக இருக்கலாம் எனக்கருதப்படுகின்றது. 2014ஆம் ஆண்டு ஸ் சிறையில் 600 கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ள்ளனர்.

ஈராக்கில் கடந்த 2014 இலிருந்து ஐ.எஸ். பயயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஏற்பட்டது. அவர்கள் ஈராக்கின் பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசத்தினை உருவாக்கியிருந்தார்கள். எனினும் தற்போது அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் ஈராக் ராணுவம் மொசூல் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளை மீட்டுள்ளதுடன் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தநிலையில் இந்த மனிதப் புதைகுழிகள் கண்டபிடிக்கப்பட்டு உள்ளன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *