இலங்கை பிரதான செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி விரிவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி விரிவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி விரிவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் இந்தக் கூட்டமைப்பில் இணைந்து கொள்வார்கள் என  தெரிவித்துள்ளார்.

விரிவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமற்ற விடயம் எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *