இலங்கை பிரதான செய்திகள்

பயங்கரவாத ஒழிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தயார் – இராணுவத் தளபதி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பயங்கரவாத ஒழிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தயார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் மீளவும் வன்முறைகள் இடம்பெறுவதனை தடுப்பதில் படையினர் சிரத்தை காண்பித்து வருவதாகவும், ஆசிய பிராந்திய வலயத்தின் பாதுகாப்பினை உறுதி செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தசாப்தங்களாக நீடித்து வந்த யுத்தத்தை இலங்கை அரசாங்கப் படையினர் முடிவுக்குக் கொண்டு வந்து தங்களது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

நன்கு பயிற்றப்பட்ட தொழில்வான்மையுடைய இலங்கை இராணுவத்தினர் பயங்கரவாத ஒழிப்பு, வன்முறைகளை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை உலக சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதப் பிரச்சினை உலக அளவில் வியாபித்துள்ளமை துரதிஸ்டவசமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *