இலங்கை பிரதான செய்திகள்

கிரிக்கட் – அர்ஜுன VS தயாசிறி….

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கிடையில் கடும்   விவாதம் இடம்பெற்றுள்ளது.

சுகததாச விளையாட்டு அரங்கினை நவீன மயப்படுத்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், விளையாட்டு அரங்கத்தின் செயற்கைப் பாதையை மீளமைக்க மத்திய அமைச்சரவைக் கடிதத்தை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க  ஏற்றுக் கொண்ட போதே  விவாதம் ஏற்பட்டுள்ளது.

அர்ஜுன எப்பொழுதும் எல்லாவிடயங்களிலும் குற்றம் சாட்டுக்களை முன்வைப்பதுடன் தலையீடுகளையும் மேற்கொள்கின்றார் என தயாசிறி:   தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த அர்ஜுன  சுகததாச தேசிய விளையாட்டு வளாகத்துக்கு  ஒரு செயற்கை பாதை தேவை என்ற போதிலும் விலையோரல  செயல்முறையில்   பிரச்சனை உள்ளதாகவும்  அதனை  சுட்டிக்காட்டும் பொறுப்பு தனக்கு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

அர்ஜுன எப்பொழுதும் கிரிக்கெட் சூதாட்டக்காரார்கள்  குறித்தே பேசுவதாகவும் அவருடன் சேர்ந்து வேலைn செய்த போது நல்லவர்கள் எனத் தெரிவித்தவர்களை போது  கெட்டவர்கள் என தெரிவிப்பதாகவும் தயசிறி குற்றம் சுமத்தினார்.  அத்துடன்  நீங்கள் துறைமுகத்திலும் கிரிக்கட் விளையாடுகின்றீர்கள் பெற்றோலியத்திலும் விளையாடுகின்றீர்கள் எனத் தெரிவித்ததுடன் வேணுமென்றால் அமைச்சை மாற்றங்கள் எனத் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த அர்ஜுனா:  தான்  தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்;கின்றேன் என தெரிவித்ததுடன் தான் இப்போது இருக்கும் அமைச்சோடு விளையாட்டுத்துறை அமைச்சையும் தந்தால்   ஏற்றுக்கொள்வேன் எனத் தெரிவித்தர்h.

இந்த வாக்குவாதம் நடைபெற்றபோது ஜனாதிபதி இடையில் தலையிட்டார். மேலும் எதிர்காலத்தில் இது பற்றி நாங்கள் தனியாக விவாதிப்போம் என்று அவர் கூறினார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *