இலங்கை பிரதான செய்திகள்

கருக்கலைப்பு மனித உரிமை கிடையாது – கர்தினால்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கருக்கலைப்பு மனித உரிமை கிடையாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கருக்கலைப்பினை சிலர் மனித உரிமையாக கருதுவதாகவும், கருவை கலைப்பது மனித உரிமையாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனிதர்களை பாதுகாப்பதற்கே சட்டங்கள் காணப்படுவதாகவும் மனித உயிர்களை கொலை செய்யவல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கமும் கருக்கலைப்பினை அறிமுகம் செய்ய முயற்சித்தது எனவும், தற்போதைய அரசாங்கமும் அந்த வழியைப் பின்பற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடவுளின் விருப்பத்தின் அடிப்படையிலேயே குழந்தைகள் பிறப்பதாகவும், அவரின் விருப்பமின்றி குழந்தைகள் பிறப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *