உலகம் பிரதான செய்திகள்

பெனாசிர் பூட்டோ கொலை தொடர்பில் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு


பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை தேடப்படும் குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.  இன்றையதினம்  ராவல்பெண்டி தீவிரவாத தடுப்பு  நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட தீர்பிபலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  இந்த வழக்குடன் தொடர்புடைய இரு காவல்துறை அதிகாரிகளுக்கு 17 வருடம் சிறை தண்டனை அறிவித்துள்ளது.  மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த  தெக்ரிக் ஐ தாலிபன் தீவிரவாத இயக்கத்தை ஐவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு  முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டமை தொடர்பில்    முஷாரப் மீது குற்றம்  சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.  வழக்கு விசாரணையின்போது மருத்துவ சிகிச்சைக்னெ     பாகிஸ்தானை விட்டு வெளியேறிய முஷாரப் கடந்த ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். இந்த நிலையிலேயே முஷாரப்பை தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *