இலங்கை பிரதான செய்திகள்

தென் ஆசியாவில் முக்கிய பங்குதாரராக இலங்கையை அமெரிக்கா கருதுகின்றது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தென் ஆசியாவில் முக்கிய பங்குதாரராக இலங்கையை அமெரிக்கா கருதுகின்றது என, அமெரிக்க பதில் துணை ராஜாங்கச் செயலாளர் அலிஸ் வேல்ஸ் தெரிவித்துள்ளார். அனைத்து வழிகளிலும் இயன்றளவு இலங்கைக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா விரும்புகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தென் ஆசியாவிற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தந்திரோபாய திட்டத்தின் முக்கிய பங்குதாராக இலங்கை திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆட்சி வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மறுசீரமைப்புக்கள், நல்லிணக்க முனைப்புக்கள் போன்றவற்றை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *