இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் பிராந்திய மதுசார புனர்வாழ்வு மையம் திறந்து வைக்கப்பட்டது:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 

கிளிநொச்சி பிராந்திய மதுசார புனர்வாழ்வு மையம் நேற்று முன்தினம்(31) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது .

2014 முதல் இயங்கிவரும் இந்த நிலையத்தில் இதுவரை மதுநோயால் பாதிக்கப்பட்டு மதுவிற்கு அடிமையாகியிருந்த 290 க்கு மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று முற்றாகக் குணமடைந்துள்ளார்கள்.

காலத்தின் தேவையான இந்த நிலையத்தினை அமைப்பதற்கான நிதியுதவிகளை கனடா தமிழ் மருத்துவர் சங்கம் (CTMA), அன்பு நெறி, சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO), டொரன்றோ பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளால் கிளிநொச்சி உளநலச் சங்கத்தினூடாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்ட உளநல பொறுப்பு வைத்தியரும் பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான மா.ஜெயராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்த நிலையத்தினை நிர்மாணிப்பதிலும் இயக்குவதிலும் பிரதான பங்குவகித்துவரும் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் முதன்மை விருந்தினராகவும் உளநலத்துறை விசேட வைத்திய நிபுணர் மகேசன் கணேசன் சிறப்புவிருந்தினராகவும் கலந்துகொண்டு பெயர்பலகையும், அதில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றினை அமைக்க உதவிய கொடையாளர் நினைவுக்கல்லும் முதன்மைவிருந்தினாரல் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *