இலங்கை பிரதான செய்திகள்

அக்கராயன் காவல்துறை பிரிவை காவல்நிலையமாக தரமுயர்த்துமாறு கோரிக்கை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி அக்கராயன்  காவல்துறைப்  பிரிவினை  காவல்துறை நிலையமாக தரமுயர்த்துமாறு அப்பிரதேச பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்திலே  அக்கராயன்  காவல்துறைப்  பிரிவினை தரமுயர்த்துமாறு தொடர்ச்சியாக பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கடந்த காலங்களில் ஆராயப்பட்ட போதிலும் இதுவரை தரமுயர்வு இடம் பெறவில்லை. இதன் காரணமாக சாதாரண குற்றங்களுக்கும் கிளிநொச்சி காவல்துறையினா் விசாரணை மேற்கொள்கின்ற நெருக்கடி காணப்படுகின்றது.

முறைப்பாடுகளை தெரிவிக்க அக்கராயன்  காவல்துறை பிரிவுக்கு செல்லும் போதெல்லாம் கிளிநொச்சி காவல் நிலையத்திற்குச் செல்லுங்கள் என தெரிவிக்கிப்படுகின் நிலைமை  கடந்த ஏழாண்டுகளாக காணப்படுகின்றது.

இந்நிலையில் அக்கராயன்  காவல் பிரிவினை காவல் நிலையங்களாக தரமுயர்த்தி ஆளணிகளை அதிகரிப்பதன் மூலம் இப்பிரதேசங்களில் இடம் பெறுகின்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும்   இதற்கு மாவட்டத்தின் காவல்துறை உயரதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது அமைப்புகள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *