இந்தியா பிரதான செய்திகள்

எடப்பாடியே முதல்வராக தொடர்வதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தின் முதலமைச்சராக  எடப்பாடி பழனிச்சாமியே தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின்  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு 19 சட்டமன்ற உறுப்பினர்கள்   எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்ததிருந்ததனையடுத்து  எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில்     முதலமைச்சராக  எடப்பாடி பழனிச்சாமியே தொடர வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  அத்துடன் அவர் எடுக்கும் முடிவுகளை ஏற்பதாகவும் மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *