இலங்கை பிரதான செய்திகள்

நிர்மாணிக்கப்பட்டு வரும் பாதுகாப்புத் தலைமையகத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அகுரேஹொடவில் புதிதாக நிர்மாணித்து வரும் பாதுகாப்பு தலைமையகங்களை கடந்த செவ்வாய்க கிழமை பார்வையிட்டார். அவருடன் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோ மற்றும் இராணுவ தளபதி லெப்டினனன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக ஆகியோருக்கும் குறித்த  இடத்திற்கு சென்றுள்ளனர்.

இந்த வளாகத்தினுள் முப்படையினர்களுக்காக அமைத்து வரும் புதிய கட்டிடங்கள் மற்றும் தொழில் நுட்ப ரீதியான நிர்மாணிப்பு தொடர்பாகவும் பார்வையிட்டதோடு, ஜனாதிபதியினால் இராணுவ தளபதிக்கு இந்த கட்டிட நிர்மாணிப்புக்கள் சாதகமான முறையில் விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.

இறுதியில்  ஜனாதிபதி இந்த பாதுகாப்பு தலைமையக கட்டிட நிர்மாண மேற்பார்வை இராணுவ சிரேஷ்ட உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply