இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்களை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நேற்றையதினம் சந்தித்த போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்த கண்காணிப்புக் குழுவினர் தற்போது இலங்கைக்கு  பயணம்  செய்துள்ளனர்.

200 நாட்களாக   கிளிநொச்சில் போராட்டம் நடத்தி வருகின்ற காணாமல் போனோரின் உறவினர்களிடம்  காணாமல் போனவர்கள் நிலைமை குறித்து கேட்டறிந்த அவர்கள்    அரசாங்கம் உரிய பதிலை துரித கதியில் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளனர். இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் காணாமல் போனவர்களின் ஐந்து தாய்மார் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தின் அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில்   ஜனாதிபதி செயற்படுவரா? ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி

Sep 7, 2017 @ 14:06

ஜனாதிபதி இராணுவத்திடம் இருந்து எழுகின்ற அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் செயற்படுவரா என காணாமல்  ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை நோக்கி  ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி எழுப்பிய போது  இல்லை   அவரால் அவ்வாறு எதனையும் செய்ய முடியாது என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் உறுதியாக பதிலளித்துள்ளனர்.

இன்று (07) மாலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களை சந்தித்த போதே ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்இவ்வாறு கேள்வி எழுப்பினா்.

மேலும்  காணாமல் ஆக்கப்பட்டவா்களின்  உறவினா்கள் இருநூறு நாள் தொடர் போராட்டத்தில்  ஈடுப்படுவது சாதாரண விடயமல்ல எனவும் இந்த விடயம் தொடர்பில்    அரசுக்கு தொடர் அழுத்தத்தை ஜரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் எனவும் ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தங்களின் உறவுகள் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டாh்கள், எப்போது  எங்கு வைத்து  ஒப்படைக்கப்பட்ட காணமல் ஆக்கப்பட்டாh்கள், இரகசிய முகாம்கள் தொடர்பான விடயங்கள் பற்றியும் எடுத்துரைத்தனா்.

அத்தோடு இலங்கை அரசாங்கத்திற்கு ஜநா மனித உரிமைகள் ஆணைக்குழு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியமை, ஜரோப்பிய ஒன்றியத்தினால் ஜிஎஸ்பி வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டமை தொடர்பில்  தங்களின் கடுமையான ஆட்சேபனையையும் தெரிவித்துக்கொண்டனா்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *