இந்தியா பிரதான செய்திகள்

இணைப்பு 2 – நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படவில்லை எனவும்  அமைதியான வழியில் போராட்டம் நடத்தலாம் எனவும்  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவின் முழுவிபரமும் வெளாகியுள்ள நிலையில் அதில் அமைதியான வழியில் போராட்டம் நடத்துவதற்கோ விமர்சிப்பதற்கோ தடையில்லை

என்றும், அமைதியாக போராட்டம் நடத்துவது தனிநபர்களின் அடிப்படை உரிமை  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம்   தடை விதித்துள்ளதாகவும் போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை

Sep 8, 2017 @ 10:21

இணைப்பு 2 – நீட் தேர்வுக்கு எதிராக
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம்  போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் மாணவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ள நிலையில் இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரியும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில்    தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமையும் என்பதால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான எந்த ஒரு போரட்டத்தையும்  அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள்  நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும்  அரசியல் கட்சிகள் கடை அடைப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அனிதா மரணம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எனத் தெரிவித்த  நீதிபதிகள்  வழக்கினை எதிர்வரும்  15ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *