உலகம் பிரதான செய்திகள்

டிரம்பிற்கு உதவும் வகையிலேயே அவரது கையை பிடித்தேன் – தெரேசா மே


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

2017 மேயில் வெள்ளை மாளிகைக்கு பயணம்  மேற்கொண்டவேளை டிரம்பிற்கு உதவும் விதத்திலேயே அவரது கையை பிடித்ததாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகைக்கான பயணத்தின் போது தெரேசா மே டிரம்பின் கரங்களை பிடித்தபடி காணப்படும் புகைப்படம் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது

குறிப்பிட்ட புகைப்படம் குறித்து பேட்டியொன்றில் மேற்கண்டவாறு  தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். நாங்கள் நடந்துகொண்டிருந்தோம்,நாங்கள் சரிவுப்பாதைக்கு அருகில் வந்தவேளை டிரம்ப் சரிவுப்பாதை காணப்படுகின்றது என்னால் நடப்பது கடினம் என்றார்.  அதன் காரணமாக அவரது கையை நான் பிடித்துக்கொண்டேன் என தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.

திடீர் என நான் ஊடகவியலாளர்களை  கண்டேன்.; உடனடியாக அது பரபரப்பான விடயமாகிவிட்டது. ஆனால் அது உண்மையில் நான் செய்த சிறிய உதவியே என தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி என்ற வகையில் உலகின் பாதுகாப்பிற்கும் நலனிற்கும் உகந்த  முடிவை எடுப்பார் எனவும் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *