இலங்கை பிரதான செய்திகள்

நல்லுர் கந்தனின் வருட வருமானம் கோடியே 37 லட்சத்து 43 ஆயிரத்து 163 ரூபா – வருமானம் நகர அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லுர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த வருமானமாக கோடியே 37 லட்சத்து 43 ஆயிரத்து 163 ரூபா        கிடைத்துள்ளதாக யாழ் மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.  அவரினால் விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பிலேயே மேற்படி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது

2017 ஆம் ஆண்டு நல்லூர்   திருவிழாக் காலத்தில் கடைகள், விளம்பரப் பதாகை, சித்த மருத்து விற்பனை, சஞ்சிகை விற்பனை சேதன உர விற்பனை, நன்கொடை ஆகியவற்றின் மூலம் மாநகர சபைக்கு 2 கோடி 58 லட்சத்து 88 ஆயிரத்து 94 ரூபா  மொத்த வருமானமாக் கிடைத்துள்ளது..

வழங்குப் பொருட்கள் ,பயன்பாட்டுச் செலவுகளுக்கான கொடுப்பனவு உட்பட மேலதிக நேரக் கொடுப்பனவு உட்பட மொத்தமாக 68 லட்சத்து 37 ஆயிரத்து 717 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.  செலவினைக் கழித்து  லாபமாக ஒரு கோடியே 37 லட்சத்து 43 ஆயிரத்து 163 ரூபா கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் வருமானம்  6.7 வீதம் அதிகரித்துள்ளதாகவும் கிடைத்த வருமானம்   நகர அபிவிருத்திக்கும் இதர சேவைகளுக்கும் பயன்படத்தப்படவுள்ளது எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *