இலங்கை பிரதான செய்திகள்

மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்காத வகையில் 20வது திருத்தம் முன்வைக்கப்பட்டால் பரிசீலிக்க தயார்

13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்காத வகையில் 20 திருத்தம் முன்வைக்கப்பட்டால் அதனை கிழக்கு மாகாண சபை சாதகமான முறையில் பரிசீலிக்க தயாராக உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

20 ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாண சபையினை பாராளுமன்றம் கட்டுப்படுத்தும் வகையிலான சில ஷரத்துக்கள்  உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவை கட்டாயம் திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   ஏறாவூர் நகரில் பாதைகள் திறப்பு விழா மற்றும் பாலங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின் பின்னர் இடம் பெற்ற பொதுக் கூட்டத்திலேயே கிழக்கு முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்,

மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரங்கள் உள்ளிட்ட சில விடயங்கள் 20 ஆம் திருத்ததில் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் அவை மாகாண சபையை வலுப்படுத்தும் 13 ஆம் திருத்தத்திற்கு முரணாணவையாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அவற்றை  திருத்தி 20 ஆம் திருத்தம் முன்வைக்கப்படுமாயின் நாட்டின் நலன் கருதி அதனை சாதகமாக பரிசீலிக்க கிழக்கு மாகாண சபை தயாராகவுள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் சிறுபான்மையினருக்கு விடிவினை ஏற்படுத்தும் வகையிலான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் முஸ்தீபுகள் உள்ளன எனவும் இந்தக் கால கட்டத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால் குறித்த திட்டங்களுக்கு பாதகம் வரலாம் எனக் கருதி 20ஆம் திருத்தத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *