உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தி, 16 அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்த  4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.    இது தொடர்பான  வழக்கினை விசாரித்து வந்த பாகிஸ்தான்  ராணுவ நீதிமன்றம் அவர்கள்  மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா கடந்த வெள்ளிக்கிழமை  உறுதி செய்து உத்தரவிட்டார்.

பொதுமக்களை கொன்றும், கடத்தியும், பாடசாலைகள் மற்றும் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டும்  குற்றம் புரிந்த 4 தீவிரவாதிகளுக்கு   மரண தண்டனை  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *