உலகம் பிரதான செய்திகள்

வட கொரியா மீது ஐ.நா. புதிய தடைகளை விதித்தது:-

Ambassadors to the UN vote during a United Nations Security Council meeting on North Korea in New York City, U.S., September 11, 2017. REUTERS/Stephanie Keith

அண்மையில் தனது 6-ஆவது அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா மீது ஏகமனதாக புதிய தடைகள் விதிக்கும் ஐ.நாவின் வாக்கெடுப்புக்கு ஆதரவாக சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன.  அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட வரைவில் கூறப்பட்ட தீர்மானங்களின்படி நிலக்கரி, ஈயம் மற்றும் கடல் உணவு ஆகியற்றை வட கொரியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 15க்கு பூச்சியம் என்ற வகையில் ஐ.நா. பாதுகாப்பு  பேரவை  வாக்களித்துள்ளது.

அண்மையில், ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை தான்வெற்றிகரமாக மேற்கொண்டதாக  அறிவித்த வட கொரியா    அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும் தெரிவித்திருந்தது.     கடந்த வாரத்தில் அமெரிக்கா முன்மொழிந்த சில கடுமையான தீர்மானங்களை அந்நாடு அகற்றிய பின்னர், இந்த புதிய தடைகளை ஐ.நா.  பேரவையில்  நிறைவேற்ற நேற்று  திங்கள்கிழமை இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது

அமெரிக்கா முன்மொழிந்த கடுமையான தீர்மானங்களில் வட கொரியா மீது முழுமையான எண்ணெய் விலக்கு மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகள் ஆகியவை உள்ளடங்குகின்றன.

 

ஐநா அமைப்பு விதித்துள்ள தடைகளையும், சர்வதேச அழுத்தத்தையும் மீறி அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ள வடகொரியா, அமெரிக்க பெருநிலப்பரப்பை சென்றடையக்கூடிய திறன் படைத்த ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.

முன்னதாக, செப்டம்பர் முதல் வாரத்தில் ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணையே பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என வட கொரியா தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *